தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு பொருட்கள்.. சொந்த செலவில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்!

தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுபொருட்கள்..

போதிய வழிப்புணர்வு இல்லாமல், தடுப்பூசி போடுவதற்கு அச்சமடைந்து ஊர்மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

 • Share this:
  உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு  கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான இளைஞர் ஒருவர் கிராம மக்களிடையே பரிசு பொருட்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியதால்  ஊர் மக்கள்  ஆர்வமுடன் வந்து  தடுப்பு ஊசிகளை போட்டுச் சென்றனர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எம். குன்னத்தூர் கிராமத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பு ஊசி போடும் பணி நேற்று முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போதிய வழிப்புணர்வு இல்லாமல், தடுப்பூசி போடுவதற்கு அச்சமடைந்து ஊர்மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர்.

  இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான  தம்பிதுரை என்பவர் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டாம் நாளான இன்று தடுப்பூசி போடும் நபருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என ஊர் மக்களிடம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அங்கு ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சில்வர் தட்டு, குடம், சில்வர் டப்பா என பரிசு பொருட்களை பெற்றுச்சென்றனர்.

  ஊர் மக்களின் நலன் கருதி தனது சொந்த செலவில் பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலரான தம்பிதுரைக்கு அப்பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

  செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: