• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?

கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?

காவலர் பிரபாகரன்

காவலர் பிரபாகரன்

கடலூர் ஆயுதப்படை காவலர் பேய் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
    காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு இறந்த பெண் பேயாக வந்து தனக்கு மரண பயம் காட்டுவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார் உயிரிழந்த  காவலர் பிரபாகரன். விடுமுறை எடுத்துக் கொண்டு 15 நாட்களாக பூஜை அறையிலேயே இருந்தவர் விடுப்பு முடிந்த அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்  பிரபாகரன் (வயது 33). இவர் கடலூர் ஆயுதப்படையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்

    இந்நிலையில், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஷ்ணுபிரியாவும் அவரது குழந்தைகளும் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு விஷ்ணுபிரியா வீடு திரும்பிய போது பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    Also Read:  சிறைத்துறையில் 100 கோடி மோசடி.. ஊழல் அம்பலமானது எப்படி?

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.கடலூர் புதுநகர் போலீசார், பிரபாகரன் உடலை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.பிரபாகரனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.



    காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு இறந்த பெண் பேயாக வந்து தனக்கு மரண பயத்தை காட்டி வருவதாகவும் அவர் கூறி வந்துள்ளார். இதனால், தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்று நினைத்த அவர் அதற்காக குறி சொல்பவரை பார்த்து மந்திரித்துள்ளார். 15 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே பூஜை அறையிலேயே இருந்துள்ளார்.விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய நிலையில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    Also Read: பணத்துக்காக மாமாவிடமே கடத்தல் நாடகம் ஆடிய மருமகன்.. போலீஸாரை அதிர வைத்த வாக்குமூலம்

    பிரபாகரன் பணியில் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் இருப்பதோடு, உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்றிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இவரது இறப்பிற்கு பணிச்சுமை காரணமல்ல என்றும், பேய் குறித்த பயம் காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பேய் அச்சத்தால் விநோதமாக நடந்து கொண்ட காவலர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: