Home /News /tamil-nadu /

ஃபேஸ்புக் நண்பனால் வந்த வில்லங்கம்.. ஷாக்கான பெண் - போலீஸ் விசாரணையில் அம்பலம்

ஃபேஸ்புக் நண்பனால் வந்த வில்லங்கம்.. ஷாக்கான பெண் - போலீஸ் விசாரணையில் அம்பலம்

செல்வம்

செல்வம்

Facebook நண்பன் செல்வத்திடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர்கள் மூலம் பெண்ணை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி அருகே முகநூல் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தால்  பெண்ணை ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் சங்கீதா. இவருக்கும் ரோடு மாமந்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முகநூலில் பேசிப்பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க சங்கீதா வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து சங்கீதாவை செல்வம் தனது இருசக்கர வாகனத்தில்  சேலம் - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    Also Read:  திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் - விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

    ஆட்களை நடமாட்டம் அதிகம் இல்லாத வனப்பகுதியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது செல்வத்தின் தொலைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. போன் பேசுவதற்காக தனியாக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பிய செல்வம் சங்கீதாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத நபர்கள் இருவரையும் மறித்துள்ளனர். சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுண் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கீதா தியாகதுருக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    Also Read:  போதைப் பொருள் கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மருத்துவ கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- 3 பெண்கள் தலைமறைவு

    தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சங்கீதாவின் முகநூல் நண்பரான செல்வத்தை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் இணைந்து சங்கீதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சங்கீதாவின் முகநூல் நண்பரான செல்வம் மற்றும் அவரின் நண்பர்களான முத்தரசன் மற்றும் பிரபு ஆகிய மூவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Facebook, Jewels, Kallakurichi

    அடுத்த செய்தி