உளுந்தூர்பேட்டை அருகே 6 வயது சிறுமிக்கு ஓடும் பேருந்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த 55 வயது முதியவர் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலத்தில் இருந்து பெண் ஒருவர் தனது 6 வயது மகளோடு தனியார் பேருந்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த சிறுமி அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்த பரசுராமன் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதன்பிறகு அந்த சிறுமி தனது தாயிடம் நடந்த சம்பவவத்தை தெரிவித்ததை தொடர்ந்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்தார்.
அதன்பின் பரசுராமன் இடம் சிறுமியின் தாயார் நேரில் கேட்டு முறையிட்டபோது அவர் அவதூறாக பேசினார். அப்போது சிறுமியின் தாயாரை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை செய்வதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பரசுராமன் மீது வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : எஸ் .செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.