Home /News /tamil-nadu /

பண்ணை வீட்டில் மூதாட்டி கொலை - சொத்துக்காக நடந்த கொலையா?.. போலீஸார் தீவிர விசாரணை

பண்ணை வீட்டில் மூதாட்டி கொலை - சொத்துக்காக நடந்த கொலையா?.. போலீஸார் தீவிர விசாரணை

மூதாட்டி கொலை

மூதாட்டி கொலை

கள்ளக்குறிச்சியில் மூதாட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சின்னசேலம் அருகே  பண்ணை வீட்டில் மர்மமான முறையில் கழுத்தறுபட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த 60 வயது மூதாட்டி. 

  நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பு (வயது 60). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு  இவருக்கும் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே கணவர் உயிரிழந்ததால் தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை காப்புக்காடு பகுதியில்  பாப்புவின் அக்கா அக்கா சரசு வசிந்து வந்தார்.

  Also Read:  செக்ஸ் வலையில் சிக்கும் தொழிலதிபர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சொப்பன சுந்தரி.. பயந்து வாய் திறக்காத 'மன்மத ராசாக்கள்'! - திருச்சியை அதிரவைத்த சம்பவம்

  மனநலம் பாதிக்கப்பட்டு சரசுவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது பிள்ளைகளையும் குடும்பத்தினரையும்  பராமரிக்கும் நோக்கோடு தனது அக்காவின் குடும்பத்திற்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாப்பு வந்துள்ளார். கடந்த 20 வருடங்களாக தனது சகோதரியின் குடும்பத்தினை தன் குடும்பம் போல் நினைத்து அங்கேயே தங்கி சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் பாப்பு. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாப்புவின் அக்கா சரசு சிகிச்சைக்காகப பெங்ளூரிலுள்ள  திருமணமான தனது மகள் கலாவின் வீட்டிற்கு  சென்று தங்கி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் சுவீடன் நாட்டில் பணிபுரிந்து வரும் சரசுவின் மகன் பொறியியல் பட்டதாரியான கார்த்தி என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு  உள்ளது. இன்னும் சில தினங்களிலேயே திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அவர்களது உறவினர்கள் உள்ள ஊர்களான ராசிபுரம் நாமகிரிப்பேட்டை மற்றும் தனது மகள் கலா வசித்து வரும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

  Also Read: வணிகர்களிடம் வசூல் வேட்டை.. பேப்பரை கிழித்தால் மாட்டிக்கொண்ட போலி போலீஸ் - கோவில்பட்டி சம்பவம்

  சரசுவின் கணவர்  செங்கோட்டையன் பாப்புவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றுள்ளார். அப்பொழுது அவரது கைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் தகரையில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு அருகே உள்ளவர்களிடம் செங்கோட்டையன்  பாப்புவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன காரணம் என குறித்து விசாரிக்க கூறியுள்ளார். அப்பொழுது அருகிலுள்ளவர்கள்  செங்கோட்டையனின் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது பாப்பு தலை நெற்றிப் பகுதியில் பலத்த காயங்களோடும் கழுத்து அறுபட்ட நிலையிலும் உயிரிழந்து  கிடப்பதாக செங்கோட்டைனுக்கு தகவல் கொடுத்தனர்.

  இதையடுத்து செங்கோட்டையன் விரைந்து வந்து தனது வீட்டிற்குள் சென்ற பொழுது பாப்பு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தனது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளுக்காக யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனரா என்று பார்த்த பொழுது வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்க பணங்கள் எதுவும் கொள்ளை போகாமல்  இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உடனடியாக இதுகுறித்து சின்னசேலம் காவல்துறையினருக்கு செங்கோட்டையன் புகார் அளித்ததன் பேரில் சின்னசேலம் போலீசார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் இந்த படுகொலை சம்பவம் குறித்து துப்பறியும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட பாப்புவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Also Read: பெண் போலீஸ் முன்பு சட்டையை கழற்றி அநாகரீகம்.. இளைஞருக்கு சிறை

  30 ஏக்கர் பண்ணை நிலத்தை கொண்டுள்ள செங்கோட்டையனின் அண்ணன் தென்னிந்தியளவில் உள்ள பிரபல வீரிய ஒட்டுரக விதைப் பண்ணை உரிமையாளர் என்பதும் அவரது மகனின் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையிலும் இந்தப் படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பது சொத்தினை அபகரிக்கும் நோக்கத்துடனோ அல்லது திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனோ நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த படுகொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : எஸ் செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Kallakurichi, Murder, Police

  அடுத்த செய்தி