• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தி.மு.க அரசு அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தி.மு.க அரசு அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்கிறது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

EPS

EPS

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தெம்பில்லாத, திராணி இல்லாத திமுக அரசு அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்துள்ளது.

  • Share this:
    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வை  எதிர்த்து வெற்றி பெற தெம்பில்லாத, திராணி இல்லாத தி.மு.க அரசு, அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்கிறது என  எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியதுடன் அதற்கு உடந்தையான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

    கள்ளக்குறிச்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அ.தி.மு.க  வேட்பாளர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னால் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர்ராஜு,  எம்.சி.சம்பத், ப.மோகன், மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அ.தி.முக நிர்வாகிகள் மற்றும் ஊரக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆயிரக்கணக்கோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அதிமுக இனை ஒருங்கினைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுகவை எதிர்த்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தெம்பில்லாத, திராணி இல்லாத திமுக அரசு அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்துள்ளதாகவும், எந்த அச்சுறுத்தலுக்கும் அதிமுக பயப்படாது எனவும், அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் உள்ளாட்சி வார்டுகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த தி.மு.க வினருக்கு ஜனநாயக முறைப்படி நாங்கள் விட்டுக் கொடுத்தோம் எனவும் பேசினார்.

    தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்துள்ளோம் எனவும் . தங்கள் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பிற்கு காரணமான அதிகாரிகள் இதற்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.  மேலும் அவர் பேசுகையில்  திமுக தேர்தலின் போது அறிவித்த  அறிவிப்புகளில் சிலவற்றை தங்கள் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களின் மட்டுமே பெயர் மாற்றி நிறைவேற்றி விட்டு பொய் பரப்புரைகளையும், விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

    எஸ்.செந்தில்குமார் - கள்ளக்குறிச்சி       

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: