Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட 1500 மதுபாட்டில்கள் அழிப்பு..!

கள்ளக்குறிச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட 1500 மதுபாட்டில்கள் அழிப்பு..!

மது பாட்டில்கள் அழிப்பு

மது பாட்டில்கள் அழிப்பு

Kallakurichi : உளுந்தூர்பேட்டை பகுதியில் மது விலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1500 மதுபாட்டில்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த மது பாட்டில்களை, உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து பறிமுதல் செய்து, குற்றத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த மது பாட்டில்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டன.  இந்நிலையில் அவற்றை அழிக்க உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் சுரேஷ் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 1500 மதுபாட்டில்களை உடைத்து அழிக்க உத்தரவிட்டார்.

    Must Read : ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 : கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்த பிரபல வியாபாரி கைது

    அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் டிஎஸ்பி ரவிச்சந்திரன், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், கோட்ட கலால் அலுவலர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு போலீசார் சேலம் சாலையில் உள்ள ஏரியில் 1500 மதுபாட்டில்களை கொட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அழித்தனர்.

    செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
    Published by:Suresh V
    First published:

    Tags: Kallakurichi, Ulundurpet

    அடுத்த செய்தி