Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்த 5 பேர் தீயில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொடர்ந்து, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அருகிலிருந்த பேக்கரியில் பரவியதையடுத்து, பேக்கரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால், அங்கு பெருமளவில் தீ விபத்து ஏற்பட்டு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு கடையில் ஏற்பட்ட இந்த பயங்கரமான தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. எனினும், எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சங்கராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீ விபத்தில் படுகாயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ.வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவ அலுவலர்களுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு வலியுறுத்தினார்.

    இந்தநிலையில், பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் நேற்று மாலை பட்டாசு கடை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக ஐந்து நபர்கள் உயிரிழந்தது குறித்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    விபத்தில் காலமானவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் நிவாரண உதவி லிருந்து வழங்கவும், தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Kallakurichi, MKStalin

    அடுத்த செய்தி