கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. 62 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை அன்று உயிரிழந்தார். வழக்கமாக பாதூர் கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை அங்குள்ள கெடிலம் ஆற்றங்கரையோர மயானத்தில் அடக்கம் செய்துவருகின்றனர்.ஆனால் மயானத்திற்கு செல்லும் பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய நிலங்களின் வழியே இறந்தவரின் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் அங்குள்ள நீர்வரத்து வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் அதிகம் நடவு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீரிலும் விளைநிலங்களில் உள்ள பயிர்களின் மீதும் தூக்கி சென்று அந்த பெண்ணின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும். அவர்களது உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Also Read : வரும் ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு? விரைவில் அறிவிப்பு வெளியாகும்
எனவே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு செல்வதற்கான பாதையை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே அந்தக் கிராம மக்களின் கோரிக்கை வவைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.