கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான சரஸ்வதி. செவிலி படிப்பு படித்துக் கொண்டிந்த சரஸ்வதி, ஏப்ரல் 2ம் தேதி அதிகாலையில், வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை அருகே முள்புதரில் சடலமாகக் கிடந்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உடற்கூறாய்வில், சரஸ்வதியின் கழுத்து நெரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது சரஸ்வதியின் காதலன் 21 வயதான ரங்கசாமி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. செல்போன் சிக்னல் அடிப்படையில், ஆந்திரமாநில எல்லையில் பதுங்கியிருந்த ரங்கசாமி, அவரது நண்பன் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரைப் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
சரஸ்வதி பண்ருட்டியில் உள்ள தனியார் செவிலியர் பயற்சி பள்ளியில் செவிலி பட்டயப் படிப்பு முடித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வந்த தாயுடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமியுடன் சரஸ்வதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது காதலிக்கு ரங்கசாமி செல்போனும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சரஸ்வதி வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. தாய்மாமன் மகனுக்கு சரஸ்வதியைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதற்காக மார்ச் மாதம் மகளுடன் ஊர் திரும்பிய தாய், தாய் மாமன் மகனுக்கு நிச்சயதார்த்தமும் செய்து வைத்து விட்டார்.
தகவல் அறிந்த காதலன் ரங்கசாமி, சரஸ்வதியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தான் வாங்கிக் கொடுத்த செல்போனையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் போலீசார் கூறுகின்றனர். புகைப்படங்களை அழித்து விடும்படி சரஸ்வதி கெஞ்சியுள்ளார்.
இதுதொடர்பாக, ஏப்ரல் 2ம் தேதி நள்ளிரவில் சரஸ்வதியை சந்திக்க சென்றுள்ளார் ரங்கசாமி. தனது நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் வீட்டின் பின்புறத்தில் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
மேலும் படிக்க... மேற்குவங்கத்தில் 5ம் கட்டத் தேர்தல் நிறைவு
வீட்டின் பின்புறத்தில் உள்ள முட்புதர் அருகே இருவரும் சந்தித்துப் பேசிய போது, சரஸ்வதி தன் பெற்றோர் முடிவுக்கு கட்டுப்பட போவதாக தெரிவித்துள்ளார். வாக்குவாதத்தின் உச்சத்தில் ஆத்திரமடைந்த ரங்கசாமி, சரஸ்வதியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தைத் துாக்கிச் சென்று வீட்டின் கழிப்பறை அருகே போட்டு விட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது ரங்கசாமி மற்றும் ரவீந்திரனைக் கைது செய்த போலீசார், 17 வயது சிறுவனை கூர்நோக்ககத்திற்கு அனுப்பி வைத்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime | குற்றச் செய்திகள், Kallakurichi, Love failure, Murder