உளுந்தூர்பேட்டையில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை.. குற்றவாளியை காட்டி கொடுத்த காது கேளாதோர் கருவி...

உளுந்தூர்பேட்டை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த கூலித் தொழிலாளி கணபதி என்பவரின் மனைவியான 32-வயதான வெண்ணிலா என்பவர் தனது குடும்ப வறுமையின் காரணமாக பண்ருட்டியில் கட்டுமானப் பணியில் சித்தாள் வேலைக்கு  சென்று வந்துள்ளார். பெரியப்பட்டு கிராமத்திற்கு நேரிடையாக பேருந்து வசதி இல்லாததால் தேவியானந்தல் பேருந்து நிலையத்தில் இறங்கி வழக்கமாக தனது கணவரை வரவழைத்து இரு சக்கர வாகனத்தில்  வீட்டிற்கு செல்வார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு பேருந்தில் வந்திறங்கிய வெண்ணிலா தனது கணவர் கணபதிக்கு போன் செய்து தான் வந்து விட்டதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். கணவரின் வருகைக்காக காத்திருந்த வெண்ணிலா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திய போதை ஆசாமிகள் சிலர் ஆபாசமாக பேசுவதும் , தன்னை அறுவறுக்கதக்க வகையில் நோட்டமிடுவதையும் கண்ட வெண்ணிலா தனது கணவருக்கு மீண்டும் போன் செய்துள்ளார்.  இன்னும் 10-நிமிடத்தில் வந்து விடுகிறேன் என கணவர் கூறவே நான் எதிரே நடந்து வருகிறேன் சீக்கிரம் வாருங்கள் என கூறி விட்டு நடந்து  சென்றுள்ளார்.

இந்நிலையில்  மனைவியை அழைத்து செல்வதற்காக வந்த கணபதி  வெண்ணிலா சாலையில் வராததைக் கண்டு தேவியானந்தல் பேருந்து நிறுத்தம் வரை சென்று பார்த்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்லும் பிரிவு சாலையான இருளா பட்டு பேருந்து நிறுத்த சாலை வரை வந்து தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள வீட்டினரிடம்  தனது மனைவி இவ்வழியே வந்தாரா என கேட்டபோது. அவர்கள்  நாங்கள் கவனிக்க வில்லை சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது போல் இருந்தது எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி ஏரிக்கறையை ஒட்டி தனது ஊருக்குச் செல்லும் பெரியப்பட்டு சாலையின் ஓரத்தில் தேடியவாறு சென்ற போது சாலையோரத்தில் உள்ள குட்டையில் முகத்தை புதைத்தவாறு வெண்ணிலா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இது குறித்து திருநாவலூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனணயை துவங்குவதற்குள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே பெரியபட்டு  காலனியை சேர்ந்த செவித்திறன் குறைபாடுள்ள 40 -வயதான ஆறுமுகம் காவல் நிலையத்தில் சரணடைத்துள்ளான். போலீசார் குற்றவாளியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே  வெண்ணிலாவின் உறவினர்கள் வெண்ணிலாவை  தனிநபர் மட்டுமல்ல இரண்டு மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர் . உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே திட்டமிட்டு ஒருவனை சரைடைய வைத்துள்ளனர் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க... யூடியூப் பார்த்து வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது..

உறுதியாக உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என அவர்களை  சமாதானபடுத்தி அனுப்பிய காவல்துறையினர் சரணடைந்த ஆறுமுகத்திடம் தொடர்ந்து விசாரனை நடத்திய போது .தான் தேவியானந்தல் பேருந்து நிலையம் அருகே நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் அங்கு நின்றிருந்த வெண்ணிலா தங்களது ஊருக்கு தனியே நடந்து செல்வதை கண்டவுடன் பின் தொடர்ந்து  சென்றதாகவும் முட்புதர்கள் நிறைந்த ஏரிக்கறை சாலையருகே சென்றபோது வெண்ணிலாவிடம் தனது ஆசைக்கு இனங்குமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு வெண்ணிலா மறுக்கவே பல வந்த படுத்தி சாலையோரம் புளிய மரத்தின் அருகே இழுத்து கீழே தள்ளிய போது அந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் இருந்த ஒன்றரையடி ஆழமுள்ள நீர் குட்டையில் விழுந்த வெண்ணிலா கூச்சலிட்டவாறு தப்பிக்க முயன்றதால் வாயை பொத்தி தண்ணீரில் அழுத்தியதாகவும் தான் போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியுள்ளான்.

மேலும் படிக்க... கொரோனா 2-வது அலையில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா..

இதனிடையே  ஆறுமுகத்தை காண வந்த உறவினர்களும், நண்பர்களும் எங்கே உனது காதில் பொறுத்திய மிஷின் என கேட்க சந்தேகமடைந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நீர் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி தடயங்களை தேடியபோது ஆற்முகத்தின் காது கேட்க பொருத்தும் கருவி அங்கு கிடந்ததை கண்டெடுத்துள்ளனர். அதனடிப்படையில் ஆறுமுகத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் உடற்கூறாய்வு சான்றிதழ் வந்தபின் தான் உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மது போதையில்  பெண்களை பாலியல் வற்புறுத்துலுக்குள்ளாக்கி    நடந்தேறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சமடைய செய்வதோடு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாகி விடும் என கவலையடையச் செய்துள்ளது. கிராமப்புற சாலையோரம் மதுபான கடைகள் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதும் உளுந்தூர்பேட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Published by:Vaijayanthi S
First published: