Home /News /tamil-nadu /

வீட்டை மீட்டு தரக்கோரி 75 வயது மூதாட்டி தர்ணா.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

வீட்டை மீட்டு தரக்கோரி 75 வயது மூதாட்டி தர்ணா.. உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

மூதாட்டி தர்ணா

மூதாட்டி தர்ணா

காவல் நிலையம் முன்பே புகார் கொடுத்த மூதாட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

    உளுந்தூர்பேட்டை அருகே சொந்த வீட்டை மீட்டு கொடுக்கக் கோரி மூதாட்டி தனது மகனுடன் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 75). இவர் சலவை தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பண்ருட்டியில் உள்ள தனது மகன் ராமச்சந்திரன் உடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ள நிலையில் இவருக்கு சொந்தமான வீட்டில் மற்றொரு நபர் குடியிருந்து வருவதாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு மடப்பட்டு கிராமத்திற்கு வந்திருந்த குப்பம்மாள் தனது வீட்டில் குடியிருக்கும் நபர்களை அப்புறப்படுத்த வேண்டும் என திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அலைகழித்து  வந்ததாக கூறப்படுகிறது.

    Also Read: துருப்பிடித்த துப்பாக்கியும்.. 7 தோட்டாக்களும் - கோவை விமானநிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை

    இந்நிலையில் போலீசார் கூறியதைத் தொடர்ந்து நேற்று மதியம் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு வந்திருந்த குப்பம்மாள் போலீசாரிடம் முறையிட்டும் அவரது வீட்டில் குடியிருப்பவர்கள் மருத்துவமனை சென்றுள்ளதாகவும் அவர்கள் வந்த பின்னரே விசாரணை செய்யப்படும் என்று அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குப்பம்மாள் தனது மகன் ராமச்சந்திரன் உடன் காவல் நிலையம் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருநாவலூர் காவல் நிலையப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Also Read: தோழிகளின் கிண்டல்.. மனஉளைச்சலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீசார் அவர்களை சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினார் தொடர்ந்து குப்பமாளுக்கு சொந்தமான வீட்டில் குடும்பம் இருப்பவர்களை உடனடியாக காலி செய்துவிட்டு அந்த வீட்டை மீண்டும் குப்பம்மாளிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து குப்பம்மாள் மற்றும் அவரது மகன் அங்கிருந்து கலைந்து சென்றனர். காவல் நிலையம் முன்பே புகார் கொடுத்த மூதாட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருநாவலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: எஸ். செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Kallakurichi, Police, Police station, Tamilnadu, Woman

    அடுத்த செய்தி