Home /News /tamil-nadu /

பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் மாணவிக்கு நடந்த பிரசவம் ... விதி பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்

பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் மாணவிக்கு நடந்த பிரசவம் ... விதி பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்

12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குழந்தை

12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குழந்தை

பொதுத் தேர்வு எழுத வேண்டிய 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உளுந்தூர்பேட்டை அருகே 12ஆம் வகுப்பு மாணவியை தாயாக்கிய 17 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் பிரசவம் நடந்ததால் மாணவியால் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விதி பட பாணியில் நடந்த இந்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் நெருங்கி பழகினர். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். மாணவியின் தாய் இறந்த நிலையில் தந்தை வெளிமாநிலத்தில் கூலி வேலை செய்து வருவதால் அந்த மாணவி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமாகியிருந்தது யாருக்கும் தெரியவில்லை. அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அந்த மாணவிக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது. அதில் அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் குழந்தைக்கான தந்தை யார் என்று  சிறுமியிடம் வலியுறுத்தி கேட்டுள்ளனர் உள்ளனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம்  காரணமாக குழந்தை பிறந்ததாகவும் தனது குழந்தைக்கு 17 வயது இளைஞர் தான் தந்தை என்றும் கூறியுள்ளார்.

    ALSO READ | கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை: கஞ்சா திருடன் கைது.. கை, கால் முறிவு

    இதையடுத்து மாணவியின் பாட்டி அந்த இளைஞர் வீட்டிற்குச் சென்று முறையிட்டுள்ளனர். அப்பொழுது இவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் அந்த பெண்ணிடம் தான் பேசவில்லை என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.  இதையடுத்து மாணவி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் பொதுத் தேர்வு நடக்கும் பொழுது பிரசவம் நடந்ததால் தன்னால் பொதுத்தேர்வு எழுத முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விதி படத்தின் பாணியில் நடந்த இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் : செந்தில்குமார் 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Kallakurichi

    அடுத்த செய்தி