அதிமுக எம்.எல்.ஏ.பிரபு தனது மகளை கடத்தியதாக நீதிமன்றம் சென்ற பெண்ணின் தந்தை

அதிமுக எம்.எல்.ஏ. பிரபு தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்கக் கோரியும் பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.பிரபு தனது மகளை கடத்தியதாக நீதிமன்றம் சென்ற பெண்ணின் தந்தை
எம்.எல்.ஏ. பிரபு திருமணம் - பெண்ணின் தந்தை
  • Share this:
கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ பிரபு, சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் தியாகதுருகத்தைச் சேர்ந்த பெண்ணின் தந்தை சுவாமிநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிமுக எம்.எல்.ஏ. பிரபு தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்கக் கோரியும் பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மேலும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏ. பிரபு, காதலியை கரம்பிடித்தார் (திருமண ஆல்பம்)அதில், தான் மிரட்டப்படுவதாகவும், தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading