பிப்ரவரி மாதத்தில் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க கலையரசன் குழு முடிவு!

பிப்ரவரி மாதத்தில் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க கலையரசன் குழு முடிவு!

துணைவேந்தர் சூரப்பா.

அரசு நிர்ணயித்துள்ள மூன்று மாத காலத்தில் சூரப்பா மீதான விசாரணை முடிக்கப்பட உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க கலையரசன் குழு முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் சாட்சியங்கள் விசாரித்து முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

Also read... அடுத்த மாதம் முதலாம், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு - உயர் கல்வித்துறை திட்டம்!

இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 2வது வாரத்தில் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் விசாரணைக்கு அழைக்க கலையரசன் குழு முடிவு செய்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள மூன்று மாத காலத்தில் சூரப்பா மீதான விசாரணை முடிக்கப்பட உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: