சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல எழுமூர்(EZHUMOOR) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், என்றார்.
இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் விசாரணை நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
Also Read : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு - சட்டப்பேரவையில் அறிவிப்பு
மேலும், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் தொடங்கப்பட வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் ஜூடீசியல் சர்வீஸ் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு எதிர்க்க வேண்டுமெனவும், இதன் மூலம் இந்திய அளவில் வேறு ஏதோ மாநிலங்களை சார்ந்தவர்கள் சார்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உருவாகும் என தெரிவித்தார்.
மின் துறை குறித்து பேசும்போது, கடந்த ஆட்சியில் தங்கமும் மணியுமாக மின்ன வேண்டிய மின்துறை ஈயமும், பித்தளையுமாக மாறியதற்கு யார் காரணம்?, என கேள்வி எழுப்பினார். மேலும் மேட்ச் பிக்சிங் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் மின் கொள்முதலில் பர்சேஸ் பிக்சிங்(Purchase fixing) செய்து அதிக விலைக்கு வாங்கி இருக்கின்றார்கள் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.