• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.100 கோடி மதிப்பில் திட்டம்: கே.என்.நேரு

நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.100 கோடி மதிப்பில் திட்டம்: கே.என்.நேரு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகரை பசுமையாக்கி அழகுபடுத்த குடியிருப்பு நகர் சங்கங்களுடன் இணைந்து வருடத்திற்கு 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    நகராட்சி மற்றும் பேருராட்சிகளில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது, இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பிறகு அமைச்சர் கே என் நேரு புதிய அறிவிப்புகளை வெளிட்டார். இதில் நகர்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நகர்புறவேலைவாய்ப்பு திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  சென்னை இரண்டு மண்டலங்கள் உள்பட அனைத்து மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம் மற்றும் 7 நகராட்சிகள், 37 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னைக்கு நகரின் மையப் பகுதியில் தற்போது உள்ள கழிவுநீர் கட்டமைப்பு பழமையானதால், அதனை மேம்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஜல்லடம்பேட்டை,  நந்தம்பாக்கம்,  மடிப்பாக்கம்,  ஆதம்பாக்கம்,  வடபெரும்பாக்கம் செம்மஞ்சேரி, உத்தண்டி இடையன்சாவடி, சடயங்குப்பம் மற்றும் கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2056 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!

     

    அமைச்சர் கே.என்.நேரு


    இதேபோல், சென்னை மாநகரில் உள்ள 10.94 லட்சம் குடியிருப்புகளில் 8.24 லட்சம் லிட்டர் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் ஜூன் 22ல் முடிக்கப்படும்.  நீலாங்கரை மற்றும் செம்மஞ்சேரியில் குடிநீர் திட்டப்பணிகள் ரூபாய் 89 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.  இந்த பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகரை பசுமையாக்கி அழகுபடுத்த குடியிருப்பு நகர் சங்கங்களுடன் இணைந்து வருடத்திற்கு 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும் . விக்டோரியா பொதுக்கூடம் அதன் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வண்ண முகப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்படும் என புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக மதனிடம் பேசியது என்ன- அண்ணமாலை விளக்கம்!


    ஆவடி, நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகள், 86 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 477 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.14 லட்சம் தெருவிளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படவுள்ளது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: