Home /News /tamil-nadu /

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

சண்முகநாதனின் முக்கியமான பங்களிப்புகளில்‌ ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால்‌ வெளியிடப்பட்ட 'வரலாற்றுச்‌ சுவடுகள்‌' நூல்‌ தொகுப்புப்‌ பணி ஆகும்‌.

    கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021-22ஆம்‌ ஆண்டிற்கான செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறை மானியக்‌ கோரிக்கையில்‌, இதழியல்‌ துறையில்‌ சமூக மேம்பாட்டிற்காகவும்‌, விளிம்புநிலை மக்களின்‌ மேம்பாட்டிற்காகவும்‌ பங்காற்றிவரும்‌ ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும்‌ 'கலைஞர்‌ எழுதுகோல்‌ விருது' மற்றும்‌ ஐந்து இலட்சம்‌ ரூபாய்‌ பரிசுத்‌ தொகையுடன்‌ பாராட்டுச்‌ சான்றிதழும்‌ வழங்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ஒவ்வோர்‌ ஆண்டும்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த நாளான ஜுன்‌ 3ஆம்‌ நாளன்று வழங்கப்படும்‌.

    அதன்படி, 'கலைஞர்‌ எழுதுகோல்‌ விருது'க்கான தேர்வுக்‌ குழுவின்‌ பரிந்துரையின்பேரில்‌ 2021-ஆம்‌ ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர்‌ ஐ.சண்முகநாதன்‌ (87) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌.

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ பிறந்த ஐ.சண்முகநாதன்‌ ‌1953-ஆம்‌ ஆண்டு தினத்தந்தியில்‌ உதவி ஆசிரியராகப்‌ பொறுப்பேற்று
    இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப்‌ பத்திரிகைத்‌ துறையில்‌ பணிபுரிந்துவருகிறார்‌. பெரும்‌ மக்களுக்கான இதழியலில்‌ இவ்வளவு நெடிய பணி அனுபவம்‌ என்பது எளிதில்‌ நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும்‌.

    மாதவிலக்கு பற்றிய உரையாடல் ஏன் அவசியம்..? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?

    பத்திரிகையின்‌ ஆசிரியர்‌ பிரிவில்‌ செய்தி ஆசிரியராக நீண்டகாலம்‌ பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள்‌ இதழியலில்‌ மொழிப்‌பயன்பாட்டைத்‌ தீர்மானித்தவர்களில்‌ ஒருவராகச்‌ செயல்பட்டிருப்பவர்‌ என்பதோடு, சமகால வரலாற்றைத்‌ தொகுத்து அளிக்கும்‌ பணிகளிலும்‌ சமூகநீதி விழுமியப்‌ பார்வையோடு அப்பணியை மேற்கொண்டிருக்கிறார்‌ சண்முகநாதன்‌.

    அவருடைய முக்கியமான பங்களிப்புகளில்‌ ஒன்று, தினத்தந்தி குழுமத்தினால்‌ வெளியிடப்பட்ட 'வரலாற்றுச்‌ சுவடுகள்‌' நூல்‌ தொகுப்புப்‌ பணி ஆகும்‌. பல்லாயிரம்‌ பிரதிகள்‌ விற்ற இந்நூலானது, சமகால வரலாற்றைப்‌ பார்க்க உதவுகிறது.

    முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த நாளை முன்னிட்டு, 2021-ஆம்‌ ஆண்டிற்கான கலைஞர்‌ எழுதுகோல்‌ விருதினை மூத்த
    பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்‌ நாளை (3.6.2022) வழங்கி சிறப்பிக்கவுள்ளார்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CM MK Stalin, DMK Karunanidhi

    அடுத்த செய்தி