2022-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை காலா பாணி என்ற நாவலுக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்தின் இன்று பெற்றுக் கொண்டார். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியான படைப்புகளுடன், ஆங்கில படைப்புகளுக்கும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. 1954 ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2022- ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான மு.ராஜேந்திரனின் காலா பாணி நாவலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
காளையார் கோவில் போர் தொடர்பான சம்பவங்களை கதைக் களமாக வைத்து இந்த வரலாற்று நாவலை ராஜேந்திரன் உருவாக்கியிருந்தார். ஆங்கிலேய அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக்குறிப்புகளுடன் சில வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களை ஆதாரமாக கொண்டு இந்த நாவல் உருவாக்கப்பட்டது. அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சாகித்ய அகாடமியை மு.ராஜேந்திரன் இன்று பெற்றுக் கொண்டார். அவருக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலையுடன் செப்பு பட்டயம் அடங்கிய விருது வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sahitya Akademi