காடுவெட்டி குருவின் சகோதரி மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
சென்னை வடபழனியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், அரசியலிலும், செல்வாக்கிலும், ராமதாஸை விட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அந்தப் பகுதியில் வளர்ந்து வருவதால் அவர் மீது வழக்கு தொடர்வதாக குற்றம் சாட்டினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த காடுவெட்டி குருவின் சகோதரி-வீரப்பன் மனைவி
மேலும் காடுவெட்டி குருவின் ஒட்டுமொத்த கடனையும், தமிழக வாழ்வுரிமை கட்சி அடைக்கும் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர், வீரப்பனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Also see... பிரசார மேடையில் ராமதாஸ் கூறிய மாம்பழக்கதை!
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.