21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம்‌: மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகள்!

21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம்‌: மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காடுவெட்டி குருவின் மகள்!

21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை நன்றி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சட்டசபையில்‌ 110 விதியின்‌ கழ்‌ அறிவிப்பு ஓன்றை வெளியிட்டார்‌. அதில்‌, 1987-ல்‌ நடந்த இட ஒதுக்கீடு போராட்‌டத்தில்‌ உயிர்‌ நீத்த 21 சமூக நீதி போராளிகளின்‌ தியாகத்தை போற்றும்‌ வகையில்‌ ரூ.4 கோடி செலவில்‌ விழுப்புரத்‌தில்‌ மணிமண்டபம்‌ அமைக்கப்படும்‌ என்று தெரிவித்து இருந்தார்‌.

  இதற்கு பல்வேறு அமைப்பினரும்‌ மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும்‌ நன்றி தெரிவித்து வருகின்றனர்‌. அந்த வகையில்‌, வன்னியர்‌ கூட்டமைப்பு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்‌ கட்சியின்‌ நிறுவனத்‌ தலைவர்‌ சி.என்‌.ராமமூர்த்தி, துணைத்‌ தலைவர்‌ ரெ.குமரப்பா ஆகியோர்‌ சென்னை தலைமை செயலகத்தில்‌ மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்‌.

  இதே போன்று, காடுவெட்டி குருவின்‌ மகள்‌ விருதாம்பிகை, மருமகன்‌ அ.மனோஜ்‌ மற்றும்‌ குடும்பத்தினர்‌ சென்னை தலைமை செயலகத்தில்‌ மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்‌. அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.செந்தில்குமாரும் ‌உடன்‌ இருந்தார்‌.

  Also read: காதலனுடன் திருமணமான புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய மகள்: மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

  முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற உடன் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அமல்படுத்த அரசாணை வெளியிட்டார் அதுமட்டுமல்லாமல் தற்போது வன்னியர் போராட்டத்தை சமூகநீதி போராட்டம் என்பதை அங்கீகரித்து இருபத்தொரு உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரத்தில் நான்கு கோடி செலவில் மணிமண்டபம் கட்ட ஆணையிட்டுள்ளார். மேலும் உயிர் நீத்த 21 தியாகிகளின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

  மக்கள் நலன் மு.க.ஸ்டாலின் அன்று திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் அதை இன்று சொன்னதை செய்தும் காட்டியுள்ளார். இவ்வாறு கழக அரசு எப்பொழுது அமைந்தாலும் வன்னியர் மக்களின் நலனை கருதி அனைத்து செயல்களும் செய்யப்படுகிறது.

  இதுபோன்று வன்னியர் நலனை உயர்த்த பாடுபட்ட தமிழினக் காவலர் மு கருணாநிதிக்கும் அந்த வழியை பின்பற்றி தற்போது செயல்படும் மு க ஸ்டாலினுக்கும் 3 கோடி வன்னியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: