அமைச்சரின் சொந்த கிராமத்தில் பரவும் கொரோனா - சிதம்பராபுரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம்

செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வின் சொந்த கிராமத்தில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

அமைச்சரின் சொந்த கிராமத்தில் பரவும் கொரோனா - சிதம்பராபுரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவக்கம்
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
  • Share this:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 8035 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6058 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1977 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த கிராமமான தூத்துக்குடி மாவட்டம் சிதம்பராபுரம் கிராமத்தில் ஒருவருக்கு நேற்று நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Also read... விநாயகர் சதுர்த்தி விழா - இந்து மத பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!


இதையடுத்து அந்த கிராமத்தில் உடனடியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு உத்தரவிட்டார். மேலும் கிராமம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.சிதம்பராபுரம் கிராமம் மட்டுமன்றி அருகில் உள்ள கிராமங்களிலும் சுகாதார பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அப்போது அமைச்சர் உத்தரவிட்டார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading