• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் - கடம்பூர் ராஜூ

டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் - கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் மீது சிங்கப்பூர் குடியுரிமை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் கையெழுத்து வாங்க கூட சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டியது இருக்கும், தனக்கு சிங்கப்பூரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கூறினார்.

  • Share this:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் மீது சிங்கப்பூர் குடியுரிமை தொடர்பாக வழக்கு இருப்பதாகவும், ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் கையெழுத்து வாங்க கூட சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டியது இருக்கும், தனக்கு சிங்கப்பூரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பிரச்சாரம் செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்க ராஜா, தனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் உண்மைக்கு புறம்பாக செய்திகளை கூறி வருவதால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும். தனது சொந்து மதிப்பு குறித்து வேட்புமனுவில் வெளிப்படையாக குறிப்பட்டு உள்ளேன்.

எனவே மாணிக்கராஜா, தான் கூறிய கருத்தினை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடருவேன். சிங்கப்பூருக்கு இதுவரை நான் சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன். அவர் கூறும் இருநாடுகளில் தனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிருபித்தால் , நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகி கொள்ள தயார்.

வாக்காளித்த மக்களுக்கு தொகுதி முழுவதும் சுற்றி பணி செய்பவர்தான் உண்மையான அரசியல்வாதி. அதற்கு தன்னை புறம்போக்கு என்று ஒருவர் சொல்கிறார். சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது டிடிவி தினகரன் கட்சி நிர்வாகி தான்.

இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை அழைத்து வந்து கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார். ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல், சிங்கப்பூருக்கு தான் சொல்ல வேண்டும். தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது.

திமுகவிற்காக தான் நில அபகரிப்பு சட்டத்தினை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுகவில் இருப்பது குடும்ப ஆட்சி. அதிமுக ஆட்சிகாலத்தில் சதாரண தொண்டன் கூட முதல்வராகும் நிலை உள்ளது. கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று வருகிறன.  கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் முன் பட்டாசு வெடித்த விவாகரத்தினை தொடர்ந்து 25 ஆயிரம் வாக்குகள் தனக்கு கூடிய விட்டது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் தற்பொழுது தன்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசீட் இழந்து விடும் நிலை உள்ளது” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: