ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடும்ப ஓட்டுகளை பிரித்து போடாதீர்கள்... : அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்

குடும்ப ஓட்டுகளை பிரித்து போடாதீர்கள்... : அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

நல்லாட்சி தரக்கூடிய ஆட்சி அமையவேண்டும் மாற்றி அமைந்தால் மக்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்....

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு வீட்டில் நான்கு வாக்குகள் இருந்தால் அமைச்சருக்கு 2 ஓட்டு, மற்றவருக்கு 2 ஓட்டு என்று பிரித்து ஓட்டுப்போட்டு ஏமாந்து போகாமல், வெற்றி வாய்ப்புள்ள அதிமுகவுக்கு அனைத்து வாக்குகளையும் மக்கள் போட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் மூன்றாவது முறையாக அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார். இன்று கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம், பசும்பொன் நகர், ‌ முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேசுகையில் வரும் சட்டமன்ற தேர்தலில், மக்களின் வாழ்வை தீர்மானிக்கக்கூடிய தேர்தல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அமையக்கூடிய ஆட்சியை தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்தல். உங்கள் வாழ்வினை நீங்களே தீர்மானிக்க கூடிய தேர்தல்.  நல்லாட்சி தரக்கூடிய ஆட்சி அமையவேண்டும் மாற்றி அமைந்தால் மக்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஒரு வீட்டில் நான்கு வாக்குகள் இருந்தால் அமைச்சருக்காக 2 ஓட்டு மற்றவருக்காக 2 ஓட்டு என்று பிரித்துப் போட்டால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். ஏனெனில் வாக்கு வீணாகிப் போய்விடும், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தகுதி அதிமுகவுக்குதான் உள்ளது. அதிமுக ஆட்சி வந்தால் நாட்டு மக்கள் தங்களது. திமுக ஆட்சி வந்தால் திமுகவின் வீட்டு மக்களுக்கு தான் நல்லது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களுக்கு என்று வாரிசு இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

ஆகையால்தான் எம்ஜிஆர் தலைமையில் மூன்று முறையும் ஜெயலலிதா தலைமையில் நான்கு முறையும் அதிமுக ஆட்சி அமைத்தது. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று தேர்தலை சந்திக்கிறது. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று தேர்தலை சந்திக்கிறது. எப்போதுமே தமிழகத்தில் தேர்தல் களம் அதிமுக-திமுக இடையே தான் போட்டி.

சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக தான், எனவே அதிமுகதான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் தொடங்குவதற்கு முன் இருந்த கருத்துக்கணிப்புகள் வேறு, தற்போதுள்ள தேர்தல் கருத்து கணிப்புகள் வேறு, 138 இடங்களில் அதிமுக தனித்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.

Must Read : சேலம் : நட்சத்திர விடுதியில் முதல்வர் - துணை முதல்வர் திடீர் ஆலோசனை

எனவே அனைத்து தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இன்றே வாஷிங் மெஷின் வைப்பதற்கு எலக்ட்ரீசியன் அழைத்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

Published by:Suresh V
First published:

Tags: Kadambur raju, Kovilpatti Constituency, TN Assembly Election 2021