கனிமொழி தவறான கருத்தை பதிய வைக்க முயற்சிக்கிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்

அமைச்சர் கடம்பூர் ராஜு.

கனிமொழி தவறான கருத்தைப் பதிய வைக்க முயற்சிக்கிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

  • Share this:
சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று கனிமொழி, “சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்ற முடிவின்படி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

அதை மறைத்து, அரசு சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக கனிமொழி தவறான கருத்தைப் பதிய வைக்க முயற்சிக்கிறார். இதில் துளி அளவும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: