• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊழலுக்காக உலகளவில் விருது வாங்கியவர்கள் தி.மு.கவினர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடல்

ஊழலுக்காக உலகளவில் விருது வாங்கியவர்கள் தி.மு.கவினர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடல்

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

ஊழலுக்காக உலகளவில் விருது வாங்கியவர்கள் தி.மு.கவினர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர். ஊழலுக்காக தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் விருது வாங்கியவர்கள் திமுகவினர். ஊழலுக்காக 1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, திமுக ஆட்சியை கலைத்தார். தி.மு.க ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தான் விளக்க வேண்டும். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியவர்கள் திமுகவினர்.

    கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று விஞ்ஞானரீதியாக நிரூபித்துவர்கள் திமுகவினர். 2ஜியில் 1.76 லட்சம் கோடி என்று கேட்டதுமே நாட்டு மக்களுக்கு மயக்கமே வந்தது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல் வழக்கினை மாற்றி தமிழன் என்றாலே தலைகுனிவை ஏற்படுத்தி உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஊழல் செய்தவர்கள் திமுகவினர். 2ஜி வழக்கு இன்னும் முடியவில்லை. 2ஜி வழக்கில் இடைக் காலமாக அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள்(ஆ.ராசா, கனிமொழி) சிறை செல்ல வேண்டிய நிலை வரும். இது எல்லாம் மக்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ‌ தேர்தல் நேரத்தில் நாங்கள் சொல்வோம் என்பதற்காக தந்திரமாக முந்திக் கொள்கின்றனர். ஊழல் என்று சொன்னாலே மக்கள் நினைவில் வருவது திமுக தான். ஊழல் என்ற வார்த்தையை மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டு அல்லது விட்டு விட்டு பேசினால் அவருக்கு நல்லது’ என்று தெரிவித்தார்.

    அ.ம.மு.க கூட்டணியில் இடம் பெறுவது பற்றி தலைமை முடிவு செய்யும் - என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறியது பற்றி கேட்டதற்கு தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கருத்தை கூறுவர். அடுத்தவர்கள் கட்சி நிலைபாட்டினை பற்றி மற்றவர்கள் கூற முடியாது. பாஜக தலைவர் எங்கள் கட்சியில் நடப்பதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது. அதிமுக கட்சி நிலைப்பாடு குறித்து சொல்வதற்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுதல் குழு, உயர்மட்ட குழு இருக்கிறது.‌ அவர்களும், ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.கவுடன் நாங்கள் கூட்டணி இருந்தாலும் கூட்டணி வேறு கொள்கை வேறு என்பதனை முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். திமுகவின் நிலைப்பாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பேசி வருகின்றனர். தொடர்ந்து பேசினால் திமுகவின் நிலை போன்று கம்யூனிஸ்டு இயக்கங்கள் தாழ்ந்து போகும் என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: