காப்புக்காடு அருவி.. ஆபத்தை உணராமல் படையெடுக்கும் இளைஞர்கள் - எச்சரிக்கும் வனத்துறை

காப்புக்காடு அருவி

அடிவாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரையும் காவு வாங்க வேண்டாம் என நினைத்து அருவியில் நீர் வரும் போது அங்கு உயிர் பலி கொடுக்கின்றனர்.

 • Share this:
  ராசிபுரம் அருகே உள்ள போதமலை காப்பு காட்டில் உள்ள தடைசெய்யப்பட்ட அருவியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் அருகே  போதமலை உள்ளது. போதமலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அருவி (இயற்கையாக அமைந்த பாலி) உள்ளது. வடுகம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஓடுகிறது.

  போதமலைப்பகுதி தடைசெய்யப்பட்ட காப்புக்காடு பகுதி என்பதால் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில்  தடை செய்யப்பட்டுள்ளது. மீறி அருவியில் குளித்தால் ராசிபுரம் வனத்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி இளைஞர்கள் பலரும் அருவியில் மதுவை வாங்கிச் சென்று அங்கேயே குடித்துவிட்டு அருவியில் டைவ் அடித்து குளிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த அருவியின் பெரும்பாலான பகுதி கடினமான பாறைகளால் ஆனது. டைவ் அடித்து குளிப்பவர்கள் கொஞ்சம் தவறினாலும் பாறையில் விழுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.கடந்த காலங்களில் பல உயிர் பலியையும் இந்த அருவி வாங்கியுள்ளது.

  இதனை கருத்தில் கொண்டு அடிவாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரையும் காவு வாங்க வேண்டாம் என நினைத்து அருவியில் நீர் வரும் போது அங்கு உயிர் பலி கொடுக்கின்றனர்.
  இருப்பினும் ஏதேனும் அசம்பாவிதம் ஆண்டுதோறும் நடந்துவருகிறது. எனவே தடைசெய்யப்பட்ட காப்பு காட்டில் உள்ள அருவியில் குளிக்க செல்லும் இளைஞர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

  செய்தியாளர் : சுரேஷ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: