சோபியாவை கைது செய்த காவல்துறை எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? - கி.வீரமணி

கி.வீரமணி

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை ஹெச்.ராஜாவை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

  தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி பேசுகையில், பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

  மேலும் இந்த விவகாரங்களுக்கு எல்லாம் மக்கள் பதிலளிக்க தொடங்கும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி தெரிவித்துக் கொண்டார். மேலும், சிம்சனில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பு வீசப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, பெரியார் சிலை மீது செருப்பு வீசுவதால் பெரியாருக்கு அவமரியாதை ஏற்படாது. இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஒரு செருப்பை தூக்கிபோட்டால் மற்றொரு செருப்பு எங்கே என கேட்டவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பெரியாரின் சிலை மீது செருப்பு வீசி நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: