அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - கி.வீரமணி

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி -  கி.வீரமணி
கி.வீரமணி
  • Share this:
அருந்ததியர் பிரிவுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கொண்டுவந்த உள்ஒதுக்கீடு மூலம் பல காலமாய் மறுக்கப்பட்ட அருந்ததியர் பிரிவினர் பலர் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உயர்ந்திருகிறார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அருந்ததியர் பிரிவுக்கு உள்ஒதுக்கீட்டை உறுதி செய்யும் அதே நிலையில் இட ஒதுக்கீடு மாநில அரசுகளின் உரிமை எனவும் அதை மாநில அரசுகள் தான் செயல்படுத்த முடியும் என்பதை உறுதிபடுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.


5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டாலும் அது குறித்து கவலைபடத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading