தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2019-ம் ஆண்டிற்கான பெரியார் விருது திராவிடக் கவிஞர் நெல்லை ஜெயந்தா, முதுபெரும் திராவிடர் கவிஞர் கண்ணிமை, திரைப்பட இயக்குனர் மீரா கதிரவன், திரைப்பட ஒளிப்பதிபாளர் கே.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட குழுவினர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
அப்போது பேசிய நடிகர் சிம்பு, 'பெரியார் குத்து' பாடலுக்கு பெயர் வைக்கப்பட்டதன் சூவாரஸ்ய தகவலை வெளியிட்டார். இந்த பாடல் வெற்றிக்கு பெரியார்தான் காரணம் என சிம்பு கூறினார்.
பெரியார் குத்து பாடலுக்கு விருது பற்ற சிம்பு
நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, பெரியாருடைய மொழி அறிவு வியக்கத்தக்கது என்றார். ஒரு குத்து பாடலில் பெரியார் உட்கருத்து புகுத்த வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடுதான் 'பெரியார் குத்து' பாடல் என்றார்.
சிம்பு-கி.வேரமனி-மதன் கார்க்கி
இதைத்தொடர்ந்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் குத்து பாடலை முதன்முதலில் கேட்டபோது வியப்படைந்ததாக தெரிவித்தார். பேசாத பேச்சுக்காக பெரியார் ஒன்றரை ஆண்டுகள் சிறை செல்ல காரணம் குத்து வெட்டு வழக்குதான் என்று நினைவுகூர்ந்தார்.
பெரியார் குத்து பாடல்
Also see... கோவையில் தமிழர் திருவிழா கோலகலம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.