தமிழக தலைமைச் செயலாளராக கே.சண்முகம் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநராக ஜே.கே திரிபாதி இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.
இதனை அடுத்து, நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.சண்முகம் ஜுலை 1-ம் தேதி புதிய பொறுப்புகளை ஏற்க இருக்கிறார். இதேபோல, காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த டி.கே ராஜேந்திரனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி.யாக இருந்த ஜே.கே திரிபாதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே.கே திரிபாதி ஒடிசாவை சேர்ந்தவராவர் ஆவார்.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.