ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!

திமுக உடனான மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளனர்.

திமுக உடனான மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செயல் தலைவர்களாக, எச்.வசந்த குமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசரை நீக்கி, கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Congress, Lok Sabha Key Candidates, Thirunavukkarasar