ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை..

ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை..

தலைமை ஆசிரியை வாசுகி

ஆன்லைன் வகுப்பு என்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடும் மாணவர்களுக்கு மத்தியில், ஈரோடு மாவட்டம், கே.ராமநாதபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள், ஆன்லைன் வகுப்பு எப்போது தொடங்குமென காத்துள்ளனர். இந்த சிறப்புக்கு தலைமை ஆசிரியையின் செயல்பாடுதான் காரணம்.

 • Share this:
  கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கே.ராமநாதபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி. இவர் பாடத்திற்கு ஏற்றாற்போல் வேடமிட்டு, செயல்முறை விளக்கத்தோடு, ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். கொரோனா அச்சத்தில் பள்ளி மூடப்பட, வாட்ஸ் ஆப் மூலம் வித்தியாசமான முறையில் இவர் எடுக்கும் பாடத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு.

  பள்ளி சீருடை நிறத்திலேயே புடவை அணிவார். மாணவர்களுடன், மாணவராய் மாறி பாடம் எடுப்பார், ஆடிப் பாடிப் பாடம் நடத்துவதையே தனக்கான அடையாளமாக வைத்திருப்பவர் என்றெல்லாம் புகழும் இவ்வூர் மக்கள், தலைமை ஆசிரியையாக வாசுகி பொறுப்பேற்ற பின்னர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கூடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

  பாடத்தை அனுப்புவதோடு மட்டுமின்றி கேள்வி கேட்டு மாணவர்களை பதில் அனுப்ப வைத்து பரிசுகளும் வழங்குகிறார். கேள்விக்கான பதிலை மாணவர்களும் அதே வேடத்தில் கூறுவதோடு, குடும்பத்தோடு சேர்ந்து நடித்து பதிலை அனுப்பி, கல்வியோடு தனித்திறமையையும் வெளிப்படுத்துகின்றனர்.

  கோபிசெட்டிப்பாளையத்தில் ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி


   

  மேலும் படிக்க... கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்வது எப்படி?

  தலைமை ஆசிரியை வாசுகி, வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் பாடத்தை தங்கள் உறவினர்களின் வீட்டு பிள்ளைகளுக்கு அனுப்பி மகிழ்கின்றனர் பெற்றோர்கள். 12 ஆண்டுகளாக கே.ராமநாதபுரத்தில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவருக்கு, 2017 ஆம் ஆண்டு தேசிய நல்லாரிசிரியர் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: