தன் படைப்பின் உரிமையை வாசகருக்கும் பகிர்ந்துள்ளார் கி.ராஜநாராயணன்!

கி.ராஜநாராயணன்

எழுத்துப் படைப்புகளின் உரிமை மற்றும் ராயல்டியை வாசகர் ஒருவருக்கும் பகிர்ந்தளித்துள்ளார் பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

  • Share this:
    தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக எழுத்துப் படைப்புகளின் உரிமை மற்றும் ராயல்டியை வாசகர் ஒருவருக்கும் பகிர்ந்தளித்துள்ளார் பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரியில் வகித்து வருகிறார். 98 வயதாகும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரை புதுச்சேரியின் ஒளிப்படக் கலைஞர் மற்றும் எழுத்தாளர் இளவேனில் உடனிருந்து கவனித்து வருகிறார். இந்தநிலையில் கி.ரா. கடந்த 26ஆம் தேதி சுயநினைவுடன் எழுதிக் கொள்வதாக கூறி ஒரு எழுத்து படிவத்தை வெளியிட்டுள்ளார்.

    அதில், தனது படைப்புகள் அனைத்தும் அவரது வாசகரான சங்கர் என்கிற புதுவை இளவேனில் மற்றும், அவரது மூத்த மகன் திவாகரன், இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன் ஆகியோரை சாரும் என கைப்பட எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ பதிவினை ஒன்றிணையும் கி.ராஜநாராயணன் வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் தனது படைப்புகள் அனைத்தும் இந்த மூவரையும் சாரும் என வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.


     


     


    தனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும் திரைப்படமாக வெளியிடுபவர்களும் அதன் ராயல்டியை இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை "கரிசல் அறக்கட்டளை" என துவங்கி எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்பும் கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: