திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என்று பெயர் மாற்றப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயர்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் குறித்த அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, பன்நோக்கு சிறப்பு அணுகு முறையுடன் கூடிய அதிநவீன நோய் தொற்று எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க சென்னை சென்னை பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும், ஆசிரியரல்லா பணியாளர்களின் காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமும் நிரப்ப அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளையும் ஆவணமாக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாடப்புத்தகங்களில் திராவிட கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அவைகள் அனைத்தும் தற்போது எடுக்கப்பட்டு விட்டன.
Must Read : அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு - தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
நோய் தொற்றுக்கான காரணங்களை ஆய்வு செய்து, தீர்வுகளைக்
கண்டறிய, தேசிய மற்றும் பன்னாட்டு சுகாதார நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, நோய் கண்டறிதல் மற்றும் மேலாண்மை மையம் அமைக்க பெரியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அறியவும், மாறி வரும் கால நிலையை எதிர்கொண்டு அதிலிருந்து மீள்வதற்கு தேவையான உத்திகளை கண்டறியும் வகையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் புதிதாக தொடங்க திட்டம் போன்றவை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK Karunanidhi, Ponmudi, TN Assembly