காங்கிரஸ் குறித்து பேசியது ஏன்? கே.என்.நேரு விளக்கம்

கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தலில் நான் தனித்து போட்டியிடவேண்டும். அல்லது அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும். இது என்னுடைய கருத்துதான்’

 • News18
 • Last Updated :
 • Share this:
  மாவட்ட நிர்வாகிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையிலேயே தி.மு.க அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்று கூறினேன் என்று தி.மு.கவின் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


  தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அந்தக் கூட்டத்தில் பேசிய திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, ‘காங்கிரசுக்கு நாம் எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சித் தேர்தலில் நான் தனித்து போட்டியிடவேண்டும். அல்லது அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும். இது என்னுடைய கருத்துதான்’ என்று பேசியிருந்தார்.

  அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதுகுறித்து விமர்சனம் அளித்த கே.என்.நேரு, ‘உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாவட்ட நிர்வாகிகள் கூறிய கருத்தைத் தான் நான் கூறினேன்.

  தி.மு.க மாவட்டச்செயலாளராக இருக்கும் நான், எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்றுதான் விரும்புவேன். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் பொறுப்பில் நான் இல்லை. நான், வெறும் மாவட்டச் செயலாளர்தான்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published: