Home /News /tamil-nadu /

ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

ராஜகண்ணப்பன்-கே.பாலகிருஷ்ணன்

ராஜகண்ணப்பன்-கே.பாலகிருஷ்ணன்

K. Balakrishnan CPM : பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு நிலைமை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றம். அந்த சட்டத்தின் படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தமிழக அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி தன்னை அவமானப்படுத்தினார் என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சரானார்.

    இவ்வாறு இலாகா மாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இலாகா மாற்றம் செய்யப்பட்டது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது தண்டனை அல்ல பரிசு என கூறியிருந்தார்.

    இந்நிலையில், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநட்டில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில், முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தியது பாராட்டுக்குரியது என்றும், ஆனால், துறையை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், ராஜ கண்ணப்பன் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றம் என்றும், அச்சட்டத்தின் படியே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். சாதிய ஆணவம் மற்றும் தீண்டாமைக்கு எதிராக என்ன விலையையும் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    Must Read : வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: CPM balakrishanan, DMK, Marxist Communist Party, Minister Rajakannappan

    அடுத்த செய்தி