சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முனீஷ்வரநாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நிதிமன்ற பொறுப்பு நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Must Read : இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக களமிறங்கியுள்ளன - தி.வேல்முருகன் காட்டம்
இந்த நிலையில் பொறுப்பு நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசு தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.