சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும்  நீதியரசர் கலையரசனுக்கு விசாரனையில் உதவ 13 அலுவலர்கள் நியமனம்

துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை மேற்கொள்ள உள்ள அலுவலகம் சென்னை பசுமை வழி சாலை யில் அமைக்கப்பட இருக்கிறது.

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும்  நீதியரசர் கலையரசனுக்கு விசாரனையில் உதவ 13 அலுவலர்கள் நியமனம்
துணைவேந்தர் சூரப்பா.
  • Share this:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு  எதிரான விசாரணையில் நீதியரசர் கலையரசனுக்கு உதவுவதற்காக 13 அலுவலர்களை நியமித்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் உதவுவதற்காக 13 பேர் கொண்ட அலுவலர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்தக் குழுவில் காவல்துறை அதிகாரி, ஆடிட்டர்  வழக்கறிஞர்கள், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை மேற்கொள்ள உள்ள அலுவலகம் சென்னை பசுமை வழி சாலை யில் அமைக்கப்பட இருக்கிறது.


அதனைத் தொடர்ந்து சூரப்பா மீது ஆதாரங்களுடன் யார்வேண்டுமானாலும் புகார்களை அளிக்கலாம் என ஏற்கனவே நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். வரக்கூடிய நாட்களில் சூரப்பா மீதான விசாரனை வேகமெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading