Home /News /tamil-nadu /

உச்சநீதிமன்றம் செய்யாது: நாம்தான் போராட வேண்டும் - நீதியரசர் ஹரிபரந்தாமன்

உச்சநீதிமன்றம் செய்யாது: நாம்தான் போராட வேண்டும் - நீதியரசர் ஹரிபரந்தாமன்

நீதியரசர் ஹரி பரந்தாமன்

நீதியரசர் ஹரி பரந்தாமன்

”உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் என்ற உயர்மட்ட நீதிபதி குழுவுக்கு அழுத்தம் இருக்கிறது இதுவரை CAA மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை இதைப் பற்றி எல்லாம் கேட்காத உச்சநீதிமன்றம் நமக்காக எதுவும் செய்யாது நாம் தான் போராடி பெற வேண்டும்” என்று நீதியரசர் ஹரி பரந்தாமன் பேசியிருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டை, காமராசர் அரங்கத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்து குடியுரிமை காப்போம், குடியரசை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்திற்கு தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஹரி பரந்தாமன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில்,
ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியர் அருணன் ஆகியோர் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா, 

”டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், அரசுக்கு எதிராகப் போராடக்கூடியவர்களை காங்கிரஸும் இடதுசாரிகளும் தூண்டி விடுகின்றனர் என்று கூறியிருக்கிறார். அதேபோல் பாஜகவின் முகவராக இருந்து CAA, NRC, NPR உள்ளிட்ட சட்டங்களுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் விடுதலைக்காக சிறுபான்மையினர் எப்படிப் போராடினார்கள் என்பதும் இந்திய அரசியல் வரலாற்றில் என்ன நடந்தது என்பது பிரதமர் மோடிக்கும் தெரியாது, நடிகர் ரஜினிகாந்துக்கும் தெரியாது. எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள்” என்றார்.

மேலும், ”தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் யாரும் தூண்டிவிட்டு நடைபெறும் போராட்டம் அல்ல மக்கள் தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட எடுத்து இருக்கக்கூடிய போராட்டம் என்று கூறிய அவர். தேசிய கொடியை ஏற்றுவதற்கு எல்லா உரிமைகளும் இஸ்லாமியருக்கு இந்திய நாட்டில் உள்ளது மிஸ்டர் மோடி உங்களுக்கு தான் அதனை கையில் எந்த அருகதையும் தகுதியும் இல்லை” என்று ஆவேசமாக சாடினார்.

”ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக மாற்றியதுபோல இந்திய நாட்டின் மக்கள் அனைவரையும் செல்லாத குடிமக்களாக மாற்றும் நிலையை தற்போது பாஜக அரசு உருவாக்கி வருகிறது என்றார். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் மத்திய அரசு கொண்டு வரும் CAA, NRC, NPR உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை சாதி, மத வேறுபாடு இன்றி ஓரணியில் நின்று அனைவரும் போராட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய,  முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்,

”நாட்டில் மிக மோசமான சூழல் நிலவுகிறது, இதே நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் எல்லாவற்றையும் விற்றுவிடுவார்கள் அதற்குள் நாம் விழித்து கொள்ள வேண்டும். இந்திய வரலாற்றில் புத்திகேட்ட அரசு, முட்டாள் அரசு இதுவாகத்தான் இருக்கும். இது ஒரு ஃபாசிஸ அரசு என சாடினார். இவர்களது ஃபாசிஸ கதைகளை விற்று மக்களை பிளவுபடுத்த ஜனநாயகம் தேவை. அதன் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி ஜனநாயகத்தையே சிதைத்து விடும் வேலையை செய்து வருகிறார்கள். மீடியா, நீதித்துறை, தேர்தல் துறை, ஐடி துறை என எல்லா துறைகளையும் அழித்து மக்கள் சக்திக்கு எதிராக செயல்படுவார்கள் இது தான் ஃபாசிஸ தன்மை, அந்த சூழல் தான் இந்தியாவில் நிகழ்கிறது. என்.ஆர்.சி என்பது இந்தியர்கள் அனைவருக்குமான பிரச்சனை அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.

Also See...
Published by:Gunavathy
First published:

Tags: Delhi, Kashmir

அடுத்த செய்தி