ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார்...!

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார்...!

பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி ஏ.பி சாஹி

பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி ஏ.பி சாஹி

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேறு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், உயர் அதிகாரிகள் கல ந்துக்கொண்டனர்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து தஹிலராமாணீ, தனது பதவியை ராஜினாமா செய்தாா். இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வா் பிரதாப் சாஹியை சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹியை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த அக்டோபா் 30ம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தாா்.

இதனைத்தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். சென்னை உயர் நீதிமன்றம் 1862ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீபதியாகவும் ஏ.பி சாஹி பதவி ஏற்று கொண்டார்.

ஏ.பி சாஹி பின்னணி...!

1959ல் பிறந்த ஏ.பி.சாஹி, 1985ல் சட்டபடிப்பை முடித்து வழக்கறிஞராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தன் பணியைத் துவங்கினார்.

2004ம் ஆண்டு செப்டம்பரில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சாஹி, 2005ல் நிரந்தர நீதிபதியாக நியமனமானார்.

அலகாபாத் வேளாண் கல்வி நிறுவனம் மற்றும் கணித இயற்பியல் எம்.ஆர்.ஐ மேத்தா ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் இவர் ஆலோசகராக இருந்துள்ளார்.

2018ம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹியை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 டிசம்பர் 31ம் தேதியில் சாஹி பணி ஓய்வுபெறுகிறார்.

First published:

Tags: AP Sahi, Madras High court