மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் மின் நுகர்வு பல மடங்கு அதிகரித்துள்ள தகவல் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட பில்தொகையை விட ஜூன் மாத பில்தெ்ாகை மும்மடங்கு உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?
மின்கட்டணம்
  • Share this:
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரை மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். அதனால் செல்போன், தொலைக்காட்சி மற்றும் கேட்ஜட்களிலேயே மக்கள் மூழ்கிக் கிடந்தனர். போதாக்குறைக்கு கோடை வெயில் காரணமாக ஏசி, ஃபேன் பயன்பாடும் சேர்ந்துகொண்டது. இதனால் வீடுகளில் மின் நுகர்வு கணிசமாக அதிகரித்திருப்பதை காண முடிவதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மின்வாரியத்தை பொருத்தவரை 433 வோல்டுக்கும் குறைவாக மின்நுகர்வு கொண்ட வீடு உள்ளிட்ட இணைப்புகள் குறைந்த மின்னழுத்தம் அல்லது LT நுகர்வோராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 11 கிலோவோல்ட் அல்லது 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பயன்படுத்துவோர் உயர்மின்னழுத்த பயனீட்டாளர் அல்லது HT நுகர்வோர் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்ச் கடைசி வாரத்தில் ஊரடங்கு அமலான நிலையில் அந்த வாரம் முதல் மக்கள் வீட்டில் முடங்கினர். தொழிற்சாலைகளும் முடங்கின. அந்த மாதத்துக்குரிய மின்கட்டணத்தை கணக்கிட்டு ஏப்ரல் மாதம் மின்வாரியம் தயாரித்த பில் தொகை 2,193 கோடி ரூபாயாகும். அதில் HT நுகர்வாருக்கான தொகை 744 கோடி ஆகும். LT நுகர்வோருக்கான தொகை 1,449 கோடி ரூபாயாகும்.


LT நுகர்வோரில் வீடுகளுக்கான பில்தொகை மட்டும் ஏப்ரலில் 385 கோடி ரூபாயாக இருந்தது. ஊரடங்குக்கு முந்தைய காலத்தை உள்ளடக்கிய மார்ச் மாதத்தில் 1,227 கோடி ரூபாயாக இருந்த HT நுகர்வோர் பில்தொகை, ஏப்ரலில் 744 கோடியாக வீழ்ச்சி அடைந்தது. மார்ச் மாதம் 382 கோடி ரூபாயாக இருந்த வீட்டு மின் இணைப்புக்கான் பில் தொகை, ஏப்ரலில் 385 கோடி ரூபாயாக சற்றே உயர்ந்தது. ஆனால் அதுவே முழு ஊரடங்குக்குப் பின் வெளியான ஏப்ரல் மாதத்துக்கான வீட்டு மின் இணைப்புக்கான பில்தொகை 766 கோடி ரூபாயாக மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

ஊரடங்கின்போது இருமடங்குக்கும் அதிகமாக மின்நுகர்வு உயர்ந்ததை இது காட்டுவதாக உள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்துக்கான வீட்டு இணைப்புக்கான பில்தொகை வெளியாகி அதிர்ச்சி அளி்த்துள்ளது. அதில் வீடுகளுக்கான மின் இணைப்பு 991 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் தகவலை நியூஸ் 18 தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் 385 கோடி ரூபாயாக இருந்த பில்தொகை சுமார் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியிருப்பது நியூஸ் 18 க்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

இதற்கு முந்தைய மாதத்தில் விடுபட்ட தொகையை பில்லில் சேர்த்ததால் பில்தொகை மும்மடங்கு உயர்வு போல் தெரிவதாக மின்வாரியத்தினர் கூறுகின்றனர். அதேநேரத்தில், மின்கணக்கீட்டு முறையில் நிகழ்ந்த மாற்றத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் கூறுகின்றனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading