சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தூதராகப் பதவியேற்றார் ஜூடித் ரேவின்

சென்னையில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் தூதராக ஜுடித் ரேவின் பதவியேற்றார்.

சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தூதராகப் பதவியேற்றார் ஜூடித் ரேவின்
ஜூடித் ரேவின்
  • Share this:
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் அமெரிக்க தூதராக இருந்த ராபர்ட் ஜி புர்கேஸின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய துணைத் தூதராக ஜூடித் ரேவின் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஜூடித் ரேவின், 2013 முதல் 2015 வரை இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துணை கலாச்சார உறவு அதிகாரியாகவும், பின்னர் தேசிய கலாச்சார உறவு அதிகாரியாக உலகமெங்கும் உள்ள அமெரிக்க அரசின் மிகப்பெரிய பரிமாற்ற வர்த்தமான திட்டங்களைப் மேற்பார்வையிட்டார்.

2015 முதல் 2017 வரை வாஷிங்டனிலுள்ள ஹெய்டி சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் சர்வதேச உறவுகள் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், லீமாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 2017 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை ஆலோசகராகப் பணிபுரிந்துள்ளார்.
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான அமெரிக்க பிரதிநிதியாக செயல்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஜூடித் ரேவ் சென்னைக்கு வருவதற்கு முன் பெரு நாட்டின் லிமாவில் அமெரிக்க தூதரகத்தில் பொதுவிவகார ஆலோசகராக பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான், சூடான், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.


ஜூடின் ரேவின், அவரது இளங்கலை படிப்பை அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading