நீதி தாமதமாக கிடைப்பதால் நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது! முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

நீதி தாமதமாக கிடைப்பதால் நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்துவிட்டது! முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை
செலமேஸ்வர்
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 11:06 PM IST
  • Share this:
தாமதிக்கப்பட்ட நீதி கிடைப்பதால் பொதுமக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்திருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதித்துறை குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் முன்னாள் நீதிபதி செலமேஸ்வர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீதிமன்றங்களில் பிராந்திய மொழி அலுவல் மொழியாக இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும். இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறை பெரும் பங்கு வகித்து இருப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ‘இருப்பினும் தாமதமாக நீதி வழங்கப்படுவதால் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து இருப்பதாகவும்  குறிப்பிட்டார். நீதித்துறையை பலப்படுத்துவதற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் பிரசாத், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Also see:

First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்