2ஜி மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முன்கூட்டியே விசாரிப்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

2ஜி மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..
கனிமொழி-ஆ.ராசா
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 7:52 AM IST
  • Share this:
கடந்த 2008-ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதுதொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், அடுத்த மாதம் 12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை நீதிபதி பிரிஜேஷ் சேதி விசாரித்தார்.

மேலும் படிக்க...தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகிறதா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..


அப்போது, நீதிபதி பிரிஜேஷ் சேதி, நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இன்று தனது தீர்ப்பை அளிக்கிறார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading