பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்த நீதிபதி சஸ்பெண்ட்!

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பெண் வழக்கறிஞரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

  ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமனற நீதிபதி ராஜவேலு பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கடந்த சில வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

  இந்நிலையில் நீதிபதி ராஜவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி தெரிவித்தார். இதையடுத்து ராஜவேலு இன்று விசாரிக்க இருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ராஜவேலு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
  Published by:DS Gopinath
  First published: