முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘சிங்கம்’ பட மீசைக்கு குட்டு வைத்த நீதிபதி… விதிமீறலா? காவலர்களுக்கான விதிமுறைகள் என்னென்ன?

‘சிங்கம்’ பட மீசைக்கு குட்டு வைத்த நீதிபதி… விதிமீறலா? காவலர்களுக்கான விதிமுறைகள் என்னென்ன?

காவலர் ராஜேஸ் கண்ணன்

காவலர் ராஜேஸ் கண்ணன்

Nilgiris | காவலர் ராஜேஷ் கண்ணனின் ‘சிங்கம்’ பட மீசையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி முருகன் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

  • Last Updated :

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஒரு வழக்கின் விசாரணையின் போது, ​‘சிங்கம்’ பட நடிகர் சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த காவலர் ஒருவரை மாவட்ட நீதிபதி கண்டித்ததால், தனது மீசையை உடனடியாக சரியான வடிவத்திற்கு முறைப்படுத்திவிட்டு அந்த காவலர் மீண்டும் நீதிமன்றம் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூலா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் காவலர் ராஜேஷ் கண்ணன். இந்த வார தொடக்கத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு காவலர் ராஜேஷ் கண்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அந்த காவலர், ​​‘சிங்கம்’ படத்தின் நாயகன் சூர்யாவை போன்று மீசை வைத்திருந்துள்ளார்.

அதனை கண்ட மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி முருகன், காவலரின் மீசையில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற மீசை குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையாக கூறப்பட்டுள்ளதா என்றும், இல்லையெனில், மீசையை திருத்தி வருமாறும் காவலர் ராஜேஷ் கண்ணனிடம் நீதிபதி முருகன் சற்று கடுமையாகக் கூறியுள்ளார். அதேசமயம், நீதிபதியின் இந்தக் கருத்தைப் பார்த்து திகைத்துப் போன காவலர் ராஜேஷ் கண்ணன், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள சலூன் ஒன்றிற்கு சென்று தனது மீசையை முறையாக திருத்திக் கொண்டு அதன் பின்னர் நீதிமன்றத்திற்கு திரும்பியுள்ளார்.

Also Read | எடப்பாடி பழனிசாமியின் முன்னிருக்கும் சட்டச் சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள் என்னென்ன? ஓர் அலசல்

காவலர் பணிக்கு சேரும் பொழுது உள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும் எனவும் அடையாளங்களை மாற்ற வேண்டுமென்றால் காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவோடு அடையாளங்களை மாற்றிக் கொள்ளலாம் எனவும் நீதிபதி முருகன் இச்சம்பவத்தில் தனது கருத்தை கூறியுள்ளார்.

இதனிடையே, இந்தச் சம்பவத்தால் உதகை நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், ‘பொதுவாக காவல் துறையில் சேருபவர்கள், காவல் துறைக்குள் நுழையும் போது அடையாள அட்டையில் இருப்பதைப் போலவே தங்கள் அடையாளங்களை மாற்றாது இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சிலர் தங்கள் நம்பிக்கைக்காக குழந்தைகள் அல்லது தங்கள் குடும்பத்தினருக்காக கடவுளுக்கு தாடி அல்லது தலைமுடியை நேந்திக்கடனாக வேண்டுவதும் உண்டு. அந்த சமயங்களில், தலையை மொட்டையடித்துக் கொண்டாலோ அல்லது அடர்ந்த மீசையை வளர்த்துக்கொண்டாலோ, உயர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

top videos

    தமிழக காவல் துறையின் நெறிமுறைகளின்படி, உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி, காவலர்கள் தங்கள் அடையாளத்தை மாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களின் அடையாள அட்டையில் உள்ள தோற்றத்தைப் போலதான் அவர்கள் இருக்கவேண்டும்’ என கூறினார்.

    First published:

    Tags: Nilgiris, Police, Tamil Nadu