Home /News /tamil-nadu /

ஆறுமுகசாமி ஆணையம் வரம்புகளை மீறி செயல்படுகிறது- அப்போலோ

ஆறுமுகசாமி ஆணையம் வரம்புகளை மீறி செயல்படுகிறது- அப்போலோ

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனை

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்கக்கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.

  • News18
  • Last Updated :
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறி செயல்படுவதாக, அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், விசாரணை ஆணையம் வரம்பை மீறிச் செயல்படுகிறது. மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு என வாதிட்டார்.

    அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், பாரபட்சமாகச் செயல்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 18 ஆலோசகர்கள், 6 எய்ம்ஸ் மருத்துவர்கள், 12 பிற மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா என ஆணையம் விசாரிப்பது, வரம்பு மீறிய செயல் எனவும் மூத்த வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

    மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டுமே தவிர, மாற்று சிகிச்சை பற்றி விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

    பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே காணொளிக் காட்சி மூலமும், 30 மருத்துவர்கள் நேரிலும் சாட்சியம் அளித்துள்ளதாகவும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

    அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Apollo hospital, Jayalalitha

    அடுத்த செய்தி