• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மு.க.ஸ்டாலின் தமிழர்களை பற்றி சிந்தித்தது இல்லை : ஈரோட்டில் ஜே.பி.நட்டா பேச்சு

மு.க.ஸ்டாலின் தமிழர்களை பற்றி சிந்தித்தது இல்லை : ஈரோட்டில் ஜே.பி.நட்டா பேச்சு

ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழர்களை பற்றி சிந்தித்தது இல்லை என்று கூறினார்.

 • Share this:
  ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழர்களை பற்றி சிந்தித்தது இல்லை என்று கூறினார்.

  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிவகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் பேசுகையில், இது பூண்ணிய பூமி, கலாச்சார் நிறைந்த ஊர், மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி உலகின் எந்த ஊருக்குச் சென்றாலும் தமிழ் மொழியை பற்றியும், அதன் கலச்சார பெருமைகளை பற்றியும் பேசி வருகிறார். ஐ.நா சபையில் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பேசியுள்ளார். இந்த வார்த்தை நம்மை ஒன்று சேர்க்கக்கூடிய வார்த்தை.

  மத்திய அரசு நாட்டிற்கான அரசு, நாமது கூட்டணி வெல்லக்கூடிய கூட்டணி. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி குடும்பத்தை மட்டும் முன்னெடுத்து செல்லக் கூடியவர்களின் கூட்டணி.

  ஏற்கெனவே திமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் 2 முறை நிராகரித்துள்ளார்கள். 3 ஆவது முறையாக தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணியை நிராகரிப்பார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல், கட்டப்பஞ்சாயத்து நிறைந்தது. குடும்ப அரசியல், பண அரசியல், கட்டப்பஞ்சாய்த்து மட்டுமே முன்னெடுக்கக்கூடிய திமுகவை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

  திமுக கூட்டணி தோல்லி அடையும். தினம், தினம் பெண்களுக்கு எதிராக திமுகவினர் பேசி வருகின்றனர். தலித் பெண்களுக்கு எதிராகவும் மோசமாக பேசி வருகின்றனர். இதன் அர்த்தம் என்னவென்றார் திமுக கூட்டணியினர் விரக்தி உச்சிக்கு சென்றுள்ளனர் என்பதை காட்டுகிறது.

  தமிழர்களுக்கு எதிரான கூட்டணி திமுக கூட்டணி. ஜல்லிக்கட்டை தடை செய்த்தது காங்கிரஸ். ஜல்லிக்கட்டு தடை மசோதாவை எதிர்க்காமல் இருந்த்து திமுக. ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்து உண்மையான கதாயாகனாக மோடி விளங்கி வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தன்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு சென்ற முதல் பிரதமர் மோடி.

  ஸ்டாலின் தமிழர்களைப் பற்றி சிந்தித்தது இல்லை. கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டாரா, இல்லை. பாஜக நடத்திய வேல் யாத்திரையால்தான் கடவுள் மறுப்பு கொள்ளை கொண்ட ஸ்டாலின் தற்போது மேடைகளில் வேல் வைத்திருக்கிறார்.

  தமிழர் முன்னேற்றக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 13ஆவது நிதி கமிஷனில் தமிழ்நாட்டிற்கு 94 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. 14 வது நிதி கமிஷனில் 5 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாடு, வெளியுறுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்நாடு. நாங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறோம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரியை வழங்கி உள்ளோம். முத்ரா கடனால் பயன் பெற்றவர்கள் அதிகமானோர் தமிழ்நாட்டினர். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

  Must Read : மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தேன்... நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்கிறேன் - பிரதமர் மோடி

   

  தமிழகத்தில், வரும் தேர்தலில் கட்டப்பஞ்சாய்த்து அருகே கூடாது, ஊழல் இருக்கக்கூடாது, குடும்ப அரசியல் இருக்கக்கூடாது. உங்களுக்கு தடையில்லமின்சாரம் தேவையெனில், திமுகவுக்கு வாக்களிக்காமல் பாஜகவுக்கு வாக்களிங்கள். வெற்றி பெற்ற பிறகு மீண்டும் நான் இங்கு வந்து பேசுவேன்” இவ்வாறு கூறினார் ஜே.பி.நட்டா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: