நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ஜெ.பி. நட்டா- எல்.முருகன்

ஜெ.பி. நட்டா

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.

  • Share this:
    இம்மாதம் 14 ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர், இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது, வேட்பாளர் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும் என்றார். முள்ளி வாய்க்கால் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், நினைவு தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும், நேற்றே எனது கண்டனத்தை தெரிவித்து விட்டேன் என்றும் கூறினார்.

     

    மேலும் படிக்க...என்னை மேலும்.. மேலும்.. வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி உருக்கம்

     

    தமிழக விவசாயிகள் மோடியின் வேளாண் திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றும், இந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களும் விவசாயிகளும் திமுகவிற்கு தோல்வியை கொடுக்க தயாராக உள்ளனர். விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறுகிறார், 2011-க்கு முன் திமுக தமிழகத்தை எப்படி சீரழித்தார்கள் என்பதை அனைவரும் பார்த்ததே. 2011-க்கு முன் தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது, 2011-க்கு பின் தமிழகம் மின் மிகை மாநிலமாக ஆகியது என்றார்.

    திமுகவினர் எப்படி நிலங்களை அபகரித்தார்கள் என்பது தெரியும் என்று கூறிய முருகன், தமிழக அரசால் நில அபகரிப்புக்கு என செல்வி ஜெயலலிதா ஆட்சியில் தனி பிரிவே உருவாக்கப்பட்டது, பெண் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக பேச்சோடுத்தான் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவிற்கு தோல்வி தோல்வி தோல்வி மட்டும் தான் என்று கூறினார்.

    தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இடம் இருக்கிறதா என்பதே தெரிய வில்லை, அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா என்பது தெரியவில்லை என்றார் எல்.முருகன்.

    ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜக விற்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: